முட்டை குழம்பு
தேவையான பொருட்கள் :
வேக வைத்த முட்டை - 3
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய தக்காளி - 3
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கடுகு - 1 / 2 டீஸ்பூன்
சோம்பு - 1 / 2 டீஸ்பூன்
பட்டை , கிராம்பு,ஏலக்காய்,பிரியாணி இலை,அன்னாசி மொக்கு - தலா 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகு தூள் - 1 / 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 /2 டீஸ்பூன்
சிக்கன் மசாலா - 1 / 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 / 4 டீஸ்பூன்
கறிமசால் தூள் - 1 / 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தயிர் - 3 ஸ்பூன்
எண்ணெய்,உப்பு - தேவையான அளவு
செய்முறை :
(1 ) வேக வைத்த முட்டையை இரண்டு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
(2 ) கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,சோம்பு ,பட்டை, கிராம்பு , ஏலக்காய் , அன்னாசி மொக்கு ,பிரியாணி இலை ,வெங்காயம் ,கறிவேப்பிலை , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
(3 ) பின்னர் அதனுடன் பச்சை மிளகாய் ,நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் ,தக்காளி நன்கு வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள் , சிக்கன் மசாலா, கரம் மசாலா, கறிமசால் தூள் சேர்த்து வதக்கி அதனுடன் தயிர் சேர்த்து தேவையான அளவு உப்பு , நீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும் .
(4 ) பின்னர் வேக வைத்த முட்டையை குழம்பில் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும் . குழம்பு கெட்டியானவுடன் இறக்கி பரிமாறவும்
* சப்பாத்தி, சாதம் ,இட்லி ,தோசை ஆகியவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக