வெண்டைக்காய் புளிகுழம்பு
தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் - 10
வெங்காயம் - 2
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 / 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
சாம்பார்தூள் - 1 1/2 டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
எண்ணெய் ,உப்பு -தேவையான அளவு
செய்முறை :
(1 ) வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும் .வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்து கொள்ளவும்
(2 ) கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு ,பூண்டு, வெங்காயம் , இஞ்சிபூண்டு விழுது ,கறிவேப்பிலை ,காய்ந்த மிளகாய் , மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும் .
(3 ) பின்னர் அதனுடன் தக்காளி,வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும் . தக்காளி நன்கு வதக்கியவுடன் சாம்பார்தூள் சேர்த்து தேவையான அளவு புளி கரைசல் , நீர்,உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும் .
(4 ) குழம்பு கெட்டியானவுடன் மல்லி தழை தூவி பரிமாறவும்
* சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக