செவ்வாய், 29 மார்ச், 2011

MUTTON GRAVY

ஆட்டு  கறி குழம்பு

தேவையான பொருட்கள் :

ஆட்டு இறைச்சி - கால் கிலோ 
சின்ன வெங்காயம் - 25
இஞ்சி - சிறிது
பூண்டு - சிறிது 
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் -2 
பட்டை - 2 துண்டு 
கிராம்பு - 2
சோம்பு -2 டீஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
கறிமசால் தூள் - 1 டீஸ்பூன் 
கரம் மசால் தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1  சிட்டிகை
தேங்காய் துருவல் - 1 கப் 
எண்ணெய்,உப்பு  - தேவையான அளவு 

செய்முறை :

(1 )  ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி   வெங்காயத்தை  வதக்கி , அதனுடன் காய்ந்த மிளகாய் ,மல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கவும்

(2 ) அதனுடன் பட்டை, கிராம்பு , இஞ்சி, பூண்டு , சோம்பு , தேங்காய் சேர்த்து மசாலா  அரைத்து வைத்து கொள்ளவும் 

(3 ) கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,சோம்பு, நறுக்கிய சின்ன வெங்காயம்,கறிவேப்பிலை , இஞ்சி பூண்டு விழுது ,பச்சை மிளகாய்  சேர்த்து வதக்கி , அதனுடன் மஞ்சள் தூள் ,ஆடு கறியையும்  சேர்த்து நீர் சேர்க்காமல்  நன்கு கிளறவும் .

(4 ) கறி  சிறிது வெந்தவுடன் அதனுடன் அரைத்து வாய்த்த மசாலாவை சேர்த்து ,தேவையான அளவு நீர் ஊற்றி கொதிக்கவிடவும்

(5 ) கறி  ஓரளவு  வெந்தவுடன் அதனுடன் மிளகாய் தூள், கறி மசாலா தூள், கரம் மசால் தூள் , உப்பு சேர்த்து  குழம்பு கெட்டியானவுடன் இறக்கவும் 


*  சாதம் , சப்பாத்தி,இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக