அரிசி பருப்பு சாதம்
தேவையான பொருட்கள் :
அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1 / 2 கப்
வெங்காயம் - 1
பூண்டு - 6 பல்
தக்காளி -1
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
கடுகு,கடலை பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் -1 /2 டீஸ்பூன்
நெய் - தாளிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
(1 ) அரிசி, பருப்பை நீரில் களைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்
(2 ) குக்கரில் நெய் ஊற்றி கடுகு , கடலை பருப்பு, சீரகம், வெங்காயம்,பூண்டு , தக்காளி, மிளகாய், கறி வேப்பிலை,மஞ்சள் தூள் சேர்த்து தாளிக்கவும்
(3 ) தக்காளி நன்கு வதங்கியவுடன் 4 கப் நீர் , தேவையான அளவு உப்பு ,சிறிது மஞ்சள் சேர்த்து கொதிக்க விடவும்
(4 ) பின்னர் ஊற வாய்த்த அரிசி, பருப்பு சேர்த்து 4 விசில் வந்ததும் இறக்கி விடவும்
* பச்சை புளி ரசத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக