வெள்ளி, 25 மார்ச், 2011

VENPONGAL


வெண்பொங்கல்

தேவையான பொருட்கள் :

பச்சரிசி -1 கப் 
பாசிபருப்பு -1 /2   கப் 
பால் - ௧ கப்
சீரகம் - 2 டீஸ்பூன் 
மிளகு - 2 டீஸ்பூன் 
முந்திரி - 7 
நெய்,உப்பு  - தேவையான அளவு 

செய்முறை :

(1 )  பச்சரிசி ,பாசிபருப்பு  ஆகியவற்றை நீரில் கழுவி சுத்தம் செய்து  கொள்ளவும்
 
(2 )  குக்கரில்  1  கப்  அரிசி, அரை  கப் பருப்புடன் , 4 கப் தண்ணீர்,1 கப் காய்ச்சிய பால் ,1 டீஸ்பூன் சீரகம் , 1 டீஸ்பூன் மிளகு,தேவையான அளவு உப்பு  சேர்த்து  5 விசில் வந்ததும் இறக்கி விடவும் 

(3 )  கடாயில் சிறிது நெய் விட்டு  1 டீஸ்பூன் சீரகம்,1  டீஸ்பூன் மிளகு , முந்திரி சேர்த்து லேசாக வறுத்து குக்கரில் உள்ள பொங்கலுடன்  சேர்த்து தேவையான நெய் ஊற்றி கிளறி பரிமாறவும் .
 
* தேங்காய் சட்னியுன் சாப்பிட நன்றாக இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக