வியாழன், 24 மார்ச், 2011

EGG GRAVY

முட்டை குழம்பு

தேவையான பொருட்கள் :
முட்டை - 4 
வெங்காயம்   -2
தக்காளி   -3
இஞ்சி,பூண்டு விழுது - சிறிதளவு
கடுகு -1 டீஸ்பூன்
கடலை பருப்பு -1 டீஸ்பூன் 
சோம்பு- சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிது 
பச்சை மிளகாய் -2
மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்
மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - சிறிது 
மல்லி தூள் -1 டீஸ்பூன் 
கறிமசால் தூள் -1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் -சிறிது 

செய்முறை :

(1 ) முட்டையை வேக வைத்து ,எண்ணையில் பொரித்து எடுத்து கொள்ளவும் 

(2 )வெங்காயம் ,தக்காளியை தனி தனியாக அரைத்து வைத்து கொள்ளவும்

(2 )ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி  கடுகு, கடலை பருப்பு, சோம்பு ,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்

(3 ) அதனுடன் அரைத்து வைத்த வெங்காயம், இஞ்சி ,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் 

(4 ) பின் அரைத்து வைத்த தக்காளி விழுதை  சேர்த்து கொதிக்க விட்டு ,மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள் ,கறிமசால் தூள் சேர்த்து தக்காளி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .

(5 ) பின்னர் தேங்காயுடன் சோம்பு சேர்த்து அரைத்த விழுதை   குழம்பில் சேர்த்து  நன்கு கொதிக்க விட்டு , எண்ணையில் பொறித்த முட்டையை  சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும் 

*சாதம், தோசை, இட்லி க்கு நன்றாக இருக்கும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக