உருளை கிழங்கு குருமா
தேவையான பொருட்கள் :
உருளை கிழங்கு - 5
வெங்காயம் - 2
தக்காளி - 1
கடுகு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
சோம்பு - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கறிமசால் தூள் - 2 டீஸ்பூன் அல்லது (சாம்பார் தூள் + தனியா தூள் )
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க :
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2
கசகசா - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
மிளகு - 3
பொட்டுகடலை - 3 ஸ்பூன்
தேங்காய் துறுவல் - 1 கப்
செய்முறை :
(1 ) உருளை கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கி வைத்து கொள்ளவும்
(2 ) அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது நீர் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்
(3 ) கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு , சோம்பு , நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி அதனுடன் நறுக்கிய தக்காளி ,கறிவேப்பிலை ,கறிமசால் தூள் சேர்த்து நன்கு வதக்கவும் .
(4 ) பின்னர் அதனுடன் வேக வைத்த உருளை கிழங்கை சேர்த்து வதக்கி , அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும் .
(5 ) அதனுடன் தேவையான அளவு உப்பு , நீர்,தேவைபட்டால் சிறிது மிளகாய் தூள் சேர்த்து குழம்பு நன்கு கொதிக்க விடவும்
(6 ) குழம்பு கெட்டியானவுடன் இறக்கி மல்லி தழை தூவி பரிமாறவும்
* இட்லி, தோசை உடன் சாப்பிட நன்றாக இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக