திங்கள், 18 ஏப்ரல், 2011

FISH GRAVY

மீன் குழம்பு 

தேவையான பொருட்கள் :

மீன் - 5 துண்டுகள் 
பெரிய வெங்காயம் - 4 
தக்காளி - 1 
பச்சை மிளகாய் - 2 
பூண்டு - 7 பல் 
இஞ்சி, பூண்டு விழுது - 1  டீஸ்பூன் 
கடுகு - 1  டீஸ்பூன் 
 சோம்பு - 1  டீஸ்பூன்
வெந்தயம் - சிறிது 
புளி - எலுமிச்சை அளவு 
கறிவேப்பிலை - சிறிது 
மிளகாய் தூள் - 1  ஸ்பூன் 
தனியாதூள் - 1  1 / 2  ஸ்பூன் 
மீன் மசாலா தூள் - 1 / 2  ஸ்பூன் 
உப்பு,நல்லெண்ணெய்  - தேவையான அளவு 

செய்முறை :

(1 )  புளி கரைசலுடன் மிளகாய் தூள் ,தனியா தூள், மீன் மசாலா தூள் ,நீளவாக்கில்  அரிந்த பச்சை மிளகாய் ,சிறிது உப்பு  கலந்து 15  நிமிடம் வைக்கவும் 

(2 ) இரண்டு  பெரிய வெங்காயத்தையும்,  தக்காளியையும்  தனித்தனியே  அரைத்து வைத்து கொள்ளவும் 

(3) கடாயில் எண்ணெய் ஊற்றி  கடுகு, சோம்பு,வெந்தயம் , பொடியாக நறுக்கிய வெங்காயம்  சேர்த்து வதக்கி அதனுடன் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் 

(4 ) பின்னர் அதனுடன் கறிவேப்பிலை , அரைத்து வைத்துள்ள தக்காளி சேர்த்து 2  நிமிடம் கொதிக்க விட்டு அதனுடன் மசாலாதூள் கலந்த புளி கரைசல்,தேவையான அளவு உப்பு   சேர்த்து  5 நிமிடம் கொதிக்கவிடவும் 

(5 ) பின்னர் சுத்தம் செய்த மீன் துண்டுகளை  குழம்பில் சேர்த்துவேக விடவும்

(6) மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி அதை குழம்புடன் சேர்க்கவும்.

(7) குழம்பு கெட்டியானவுடன் இறக்கி பரிமாறவும் 

*   சாதம் ,இட்லி , தோசை ஆகியவற்றுடன்  சாப்பிட நன்றாக இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக