பூண்டு குழம்பு
தேவையான பொருட்கள் :
பூண்டு - 2 கட்டு
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 4
சோம்பு - 1 / 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
தனியாதூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மல்லிதழை - சிறிது
தேங்காய் துறுவல் - சிறிது
புளி - எலுமிச்சை அளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க
கடலை பருப்பு - 1 / 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 / 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
வெந்தயம் - சிறிது
சீரகம் - 1 / 2 டீஸ்பூன்
தனியா - 1 / 2 டீஸ்பூன்
மிளகு - 4
செய்முறை :
(1 ) வறுக்க கொடுத்துள்ளவற்றை கடாயில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும்.
(2 ) ஒரு பெரிய வெங்காயத்தையும்,தேங்காய் துறுவலையும் தனித்தனியாக விழுதாக அரைத்து கொள்ளவும்
.
(3) கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,சோம்பு , பூண்டு ,நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் ,பின்னர் அதனுடன் அரைத்த வெங்காய விழுதை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
(4 ) பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதங்கி ,மஞ்சள் தூள் ,சாம்பார் தூள் ,தனியா தூள் ,மிளகாய் தூள் ,உப்பு சேர்த்து வதக்கி அதனுடன் புளி கரைசலை சேர்க்கவும் .
(5 ) குழம்பு ஒரு கொதி வந்ததும், வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியை சிறிது நீரில் கட்டி இல்லாமல் கரைத்து குழம்பில் சேர்க்கவும் . 2 நிமிடம் கழித்து தேங்காய் விழுதை சேர்த்து குழம்பை நன்கு கொதிக்க விடவும்
(5 ) குழம்பு கெட்டியானவுடன் இறக்கி மல்லிதழை தூவி பரிமாறவும்
* சாதம் ,இட்லி, தோசை உடன் சாப்பிட நன்றாக இருக்கும்
@ வறுத்து அரைத்த பொடியை எல்லா விதமான புளி குழம்பிலும் சேர்க்கலாம்.இந்த பொடி சுவை தருவதுடன் குழம்பு கெட்டிபதம் வர உதவும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக