செவ்வாய், 12 ஏப்ரல், 2011

ALOO PARATHA

உருளை கிழங்கு சப்பாத்தி 

தேவையான பொருட்கள் :

பராத்தா  தயாரிக்க

கோதுமை மாவு  - 2  கப் 
உப்பு - 1 ஸ்பூன் 
எண்ணெய் - 3  ஸ்பூன் 
தண்ணீர் - 1  கப் 

மசாலா தயாரிக்க 


உருளை கிழங்கு -  4 
வெங்காயம் - 2 ( பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது )
இஞ்சி - சிறிது ( பொடியாக நறுக்கியது )
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 / 2 டீஸ்பூன்
சோம்பு - 1 / 2   டீஸ்பூன் 
கிராம்பு - 1 / 2  டீஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயகீரை பொடி  - 1  டீஸ்பூன்  (OPTIONAL )
மல்லி தழை - சிறிது 
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை:

(1 )  கோதுமை மாவுடன் உப்பு, எண்ணெய் ,வெதுவெதுப்பான தண்ணீர்  சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைத்து அதன் மேல்  ஈர  துணி போட்டு 20 நிமிடம்  வைக்கவும்

(2 ) உருளை கிழங்கை சிறிது உப்பு ,மஞ்சள் தூள் சேர்த்து  வேக வைத்து ,தோல் நீக்கி நன்கு கட்டி இல்லாமல் மசித்து கொள்ள வேண்டும் . 

 (3 )  கடாயில் எண்ணெய் ஊற்றி  கடுகு, சோம்பு , சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம் ,பச்சை மிளகாய் ,இஞ்சி ,மஞ்சள்தூள்,மிளகாய் தூள்,தேவையான அளவு  உப்பு சேர்த்து  வதக்கி இறக்கவும் .
(4 ) அதனுடன் பொடியாக நறுக்கிய மல்லிதழை ,வெந்தயகீரை பொடி சேர்த்து மசித்த உருளை கிழங்கை சேர்க்கவும் .

(4 ) இந்த உருளை கிழங்கு மசாலா கலவையை சிறு ,சிறு உருண்டைகளாக  பிடித்து கொள்ளவும் 

(5 ) சப்பாத்தி மாவை  தனி தனி  உருண்டைகளாக பிரித்து கொள்ளவும் .ஒரு மாவு உருண்டையை  சப்பாத்தி தேய்ப்பது  போல் தேய்க்கவும் , ஆனால்  நடு பகுதி தடிமனாகவும் ,ஓரம் அதை விட சிறிது மெலிதாகவும் தேய்த்து  கொள்ளவும் 

(6 )  நடுவில் உருளை கிழங்கு மசாலாவை வைத்து மாவை ஓர பகுதிகளை ஒன்றாக இணைத்து  மீண்டும் சப்பாத்தி தேய்ப்பது போல் மெதுவாக ,மசாலா வெளியில் வராதவாறு தேய்த்து கொள்ளவும் 

(7 )பின்னர் அதை சப்பாத்தி சுடுவது போல் இரண்டுபக்கமும் எண்ணெய் விட்டு சுட்டு பரிமாறவும்


*  தயிருடன் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக