செவ்வாய், 12 ஏப்ரல், 2011

CHICKPEAS GRAVY

சுண்டல் குழம்பு 

தேவையான பொருட்கள் :

சுண்டல் - 1 கப்
வெங்காயம் - 3 
தக்காளி - 1 
பூண்டு - 6  பல்
இஞ்சி +பூண்டு+பச்சைமிளகாய்  விழுது - 1 ஸ்பூன் 
கடுகு - 1 ஸ்பூன் 
பட்டை - 2 துண்டு 
கிராம்பு - 2 
சோம்பு - 1  டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 
மஞ்சள் தூள் - சிறிது 
தனியா தூள் - 2 டீஸ்பூன்
சிக்கன் மசாலா தூள்  - 1 ஸ்பூன்
கறிமசால்  தூள் - 1  டீஸ்பூன் 
மிளகாய் தூள் - காரத்திற்கு தேவையான அளவு
புளி கரைசல் - சிறிது 
கறிவேப்பிலை -  சிறிது 
தேங்காய் துருவல் - 1 /2  கப் 
மல்லி தழை- சிறிது
எண்ணெய்,உப்பு - தேவையான அளவு 


செய்முறை :

(1)  சுண்டலை மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ளவும் 

( 2)  கடாயில் எண்ணெய் ஊற்றி  2 நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய்  சேர்த்து வதக்கி ,அதனுடன் தனியா தூள் சேர்த்து வதக்கி,ஆற வைத்து அதனுடன் பூண்டு, பட்டை , அரை ஸ்பூன் சோம்பு ,கிராம்பு,தேங்காய் சேர்த்து நன்கு அரைத்து  வைத்து கொள்ளவும் 

(3 ) கடாயில் எண்ணெய் ஊற்றி ,கடுகு ,சோம்பு ,நறுக்கிய வெங்காயம் ,(இஞ்சி+ பூண்டு+பச்சை மிளகாய்)  விழுது ,  கறிவேப்பிலை ,நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன்  மஞ்சள் தூள், கறிமசால் தூள் ,சிக்கன் மசாலா தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும் 

(4 ) அதனுடன் வேக வைத்துள்ள சுண்டல் சேர்த்து வதக்கி ,அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து ,சிறிது புளி கரைசல் ,தேவையான அளவு நீர்,உப்பு  ,காரத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும் 

(5 ) குழம்பு கெட்டியானவுடன் மல்லி தழை  தூவி பரிமாறவும்


* சாதம், தோசை ஆகியவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக