தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 1 கப்
நறுக்கிய காய்கறிகள் - 2 கப் ( கேரட்,பீன்ஸ் , காலிப்ளவர்,உருளை கிழங்கு ) பச்சை பட்டாணி - சிறிது
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 2
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தனியாதூள் - 1 1 / 2 டீஸ்பூன்
தனியாதூள் - 1 1 / 2 டீஸ்பூன்
கேசரி கலர் பவுடர் - 1 சிட்டிகை
கொத்தமல்லி தழை - சிறிது
புதினா தழை - சிறிது
எலுமிச்சை பழம்- அரை மூடி
நெய்,எண்ணெய் - தாளிக்க
நெய்,எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
விழுதாக அரைக்க :
இஞ்சி- சிறிது
இஞ்சி- சிறிது
பூண்டு - 15 பல்
பச்சை மிளகாய் - 2
தாளிக்க :
கடுகு - 1 ஸ்பூன்
மிளகு - 6 சோம்பு
சோம்பு - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 2
பச்சை மிளகாய் - 2
தாளிக்க :
கடுகு - 1 ஸ்பூன்
மிளகு - 6 சோம்பு
சோம்பு - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 6 பல்
சோம்பு - 1 டீஸ்பூன்
பிரியாணி மசாலா அரைக்க :
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய்- 2
அன்னாசி மொக்கு - 2
சீரகம் - 1 /2 டீஸ்பூன்
செய்முறை :
(1 ) அடி கனமான பாத்திரம் அல்லது நான்ஸ்டிக் பாத்திரத்தை பிரியாணி செய்ய பயன்படுத்தவும்.
(2 ) பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும் .பிரியாணி மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்து கொள்ளவும் .
(3 ) பாத்திரத்தில் நெய்,எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களுடன் அரைத்து வைத்துள்ள பிரியாணி மசாலாவை சேர்த்து தாளித்து அதனுடன் வெங்காயம் ,பூண்டு, கறிவேப்பிலை , நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும் .
(4 ) பின்னர் அதனுடன் இஞ்சி + பூண்டு + பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
(5 ) பின்னர் நறுக்கிய காய்கறிகள், பட்டாணி சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் ,தனியாதூள் ,மிளகாய் தூள்,மல்லி தழை,புதினா தழை சேர்த்து வதக்கவும்
(6 ) பின்னர் அதனுடன் 4 கப் நீர் , கேசரி கலர் பவுடர் ,தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு , தண்ணீர் நன்கு கொதித்ததும், அதிலிருந்து 1 கப் மசாலா தண்ணீரை தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.
(7 ) இப்பொழுது ஊற வைத்த அரிசியை சேர்த்து மூடி போட்டு பாத்திரத்தை மூடி விடவும், சிறிது நேரத்திற்கு ஒரு முறை சாதம் அடி பிடிக்காதவாறு கிளறி விடவும்
(8 ) பாத்திரத்தில் தண்ணீர் வற்றியவுடன் தனியாக எடுத்து வைத்துள்ள 1 கப் மசாலா தண்ணீரை சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைந்த தீயில் வைத்து மூடி விடவும்
(9 ) பின்னர் அரை மூடி எலுமிச்சம் பழ சாரை சேர்த்து கிளறி ,அடுப்பை அணைத்து ,பாத்திரத்தை மூடி, 5 நிமிடம் அடுப்பின் மீதே வைக்கவும். .அடுப்பின் சூட்டில் அரிசி நன்கு வெந்து விடும்.
(10 ) மல்லி தழை , தயிர் பச்சடி சேர்த்து பரிமாறவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக