திங்கள், 11 ஏப்ரல், 2011

VEGETABLE RICE

வெஜ்ஜிடபில்  சாதம் 

 தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 1 கப்
நறுக்கிய காய்கறிகள்  - 2 கப்    ( கேரட்,பீன்ஸ் , காலிப்ளவர்,உருளை கிழங்கு )  பச்சை பட்டாணி - சிறிது 
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 1                                               
இஞ்சி ,பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1  டீஸ்பூன் 
பட்டை - 2  துண்டு 
கிராம்பு - 2  
ஏலக்காய்- 2 
பிரியாணி இலை - 2 
அன்னாசி மொக்கு - 2 
மஞ்சள் தூள் - 1   சிட்டிகை 
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தனியாதூள் - 1  1 / 2   டீஸ்பூன் 
கேசரி கலர் பவுடர் - 1 சிட்டிகை 
கொத்தமல்லி தழை - சிறிது 
புதினா தழை - சிறிது 
நெய்,எண்ணெய் - தாளிக்க
செய்முறை :

(1 ) அடி கனமான பாத்திரம்  அல்லது  நான்ஸ்டிக்  பாத்திரத்தை  சாதம்  செய்ய பயன்படுத்தவும் 

(2 ) பிரியாணி அரிசியை 15  நிமிடம் ஊற வைக்கவும் 

(3 ) நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய் ,எண்ணெய் ஊற்றி  கடுகு, 1  ஸ்பூன் சோம்பு, ஏலக்காய், பட்டை, கிராம்பு , அன்னாசி மொக்கு , பிரியாணி இலை சேர்த்துதாளித்து , அதனுடன் வெங்காயம் , இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

(4 ) வெங்காயம் ஓரளவு வதங்கியவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன்  மஞ்சள் தூள் , மிளகாய் தூள், தனியா தூள் ,நறுக்கிய கொத்துமல்லி தழை ,புதினா தழை  சேர்த்து வதக்கி அதனுடன் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து 2  நிமிடம்  வதக்கவும்

(5 ) பின்னர் அதனுடன் 4 கப் நீர் , கேசரி கலர் பவுடர் ,தேவையான அளவு உப்பு  சேர்த்து கொதிக்க விட்டு , தண்ணீர் நன்கு கொதித்ததும், அதிலிருந்து 1 கப் மசாலா தண்ணீரை தனியே  எடுத்து வைத்து கொள்ளவும்.

(6 ) இப்பொழுது  ஊற வைத்த  அரிசியை சேர்த்து மூடி போட்டு பாத்திரத்தை மூடி விடவும், சிறிது நேரத்திற்கு  ஒரு முறை சாதம்  அடி பிடிக்காதவாறு   கிளறி விடவும் 

(7 ) பாத்திரத்தில் தண்ணீர் வற்றியவுடன் தனியாக எடுத்து வைத்துள்ள 1  கப் மசாலா தண்ணீரை சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைந்த தீயில் வைத்து மூடி விடவும் 

(8 ) பின்னர் அரை மூடி எலுமிச்சம் பழ சாரை சேர்த்து கிளறி ,அடுப்பை அணைத்து ,பாத்திரத்தை மூடி,  5  நிமிடம் அடுப்பின் மீதே  வைக்கவும். .அடுப்பின் சூட்டில் அரிசி  நன்கு வெந்து விடும்.

(9 ) மல்லி தழை , தயிர் பச்சடி சேர்த்து பரிமாறவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக