வியாழன், 7 ஏப்ரல், 2011

PAKORA KADHI

பக்கோடா மோர்குழம்பு

தேவையான பொருட்கள் :
குழம்பு தயாரிக்க :
தயிர் - 1  கப் 
கடலை மாவு - 4  டீஸ்பூன்
வெங்காயம் - 1 
துருவிய இஞ்சி - சிறிது 
கடுகு - 1  டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
வெந்தயம் - 1 /4  டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 
கறிவேப்பிலை - சிறிது 
மிளகாய் தூள் - 1  1 /2  டீஸ்பூன் 
பெருங்காய தூள் - 1 சிட்டிகை 
மஞ்சள் தூள் - 1  டீஸ்பூன் 
எண்ணெய், உப்பு - தேவையான அளவு 


பக்கோடா தயாரிக்க:

கடலை மாவு - 1  கப் 
நீளவாக்கில் நறுக்கிய  வெங்காயம் - 4 
மிளகாய் தூள் - 1  டீஸ்பூன் 
சோடா உப்பு -1  சிட்டிகை 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை :

(1 ) பக்கோடா தயாரிக்க கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெய் நீங்கலாக அனைத்தையும் ஒன்றாக கலந்து தேவையான அளவு நீர் சேர்த்து,பக்கோடாவாக எண்ணையில் பொரித்து எடுத்து கொள்ளவும் 

(2 ) குழம்பு தயாரிக்க கொடுத்துள்ள அளவு  தயிரை,  4  ஸ்பூன் கடலை மாவுடன் சேர்த்து  கட்டி இல்லாமல் நன்கு அடித்து  அதனுடன்   3  கப் நீர் , மஞ்சள் தூள் சேர்த்து  கலந்து வைத்து கொள்ளவும் 

(3 ) கடாயில் எண்ணெய் ஊற்றி  கடுகு, சீரகம் ,வெந்தயம் , பெருங்காய தூள் ,பொடியாக நறுக்கிய வெங்காயம் , இஞ்சி சிறிது ,காய்த்த மிளகாய் ,கறிவேப்பிலை , மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து தாளிக்கவும்

(4 )  அதனுடன் கடலை மாவு, தயிர்  கலந்த கலவையை  ஊற்றி ,உப்பு சேர்த்து கொதிக்க விடவும் 

(5 ) குழம்பு லேசாக கெட்டியானவுடன் ,பக்கோடாவை  அதில் போட்டு 2   நிமிடம் கொதிக்க விட்டு  அடுப்பிலிருந்து இறக்கி விடவும் 

(6 ) கொத்துமல்லி தழை சேர்த்து  அரை மணி நேரம்  கழித்து பரிமாறவும் .

@ பக்கோடா, குழம்பில் நன்கு ஊறிய பின் சாப்பிட நன்றாக இருக்கும்


*  சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக