புதினா சட்னி
தேவையான பொருட்கள் :
புதினா - 1கட்டு
கொத்துமல்லி தழை- 1/4 கட்டு
வெங்காயம் - 2
தக்காளி - 1
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 ( காரத்திற்கு தேவையான அளவு )
ஊற வைத்த புளி - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - 5 ஸ்பூன்
எண்ணெய்,உப்பு - தேவையான அளவு
செய்முறை :
(1 ) புதினா ,கொத்துமல்லி தழை இரண்டையும் நன்கு சுத்தம் செய்து நறுக்கி வைத்து கொள்ளவும் .
(2 ) கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு , உளுத்தம்பருப்பு ,சீரகம் சேர்த்து தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் , பச்சைமிளகாய் ,சேர்த்து வதக்கவும்
(3 ) வெங்காயம் லேசாக வதங்கியவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள புதினா ,கொத்துமல்லி தழை சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும் .
.
(4 ) பின்னர் அதனுடன் ஊற வைத்த புளி ,தேங்காய் துருவல் ,தேவையான அளவு உப்பு ,நீர் சேர்த்து அரைத்து கொள்ளவும் .
* சாதம் , தோசை , இட்லியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக