திங்கள், 2 மே, 2011

CHICKEN LOLLIPOP

சிக்கன்   லாலிபாப் 

தேவையான பொருட்கள் :

சிக்கன் லாலிபாப்  -  6  துண்டுகள் 
முட்டை - 2 
மிளகாய் தூள் - 1  1/2   டீஸ்பூன்  
இஞ்சிபூண்டு விழுது - 1  டீஸ்பூன் 
சோயா சாஸ் - 1  ஸ்பூன் 
டொமாடோ சில்லி சாஸ் - 1  டீஸ்பூன்
SCHEZWAN சாஸ்- 1 டீஸ்பூன்
சோளமாவு - 4  ஸ்பூன்
பிரட் துண்டுகள் - 4
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை : 

(1 )  முட்டையை உடைத்து  வெள்ளை, மஞ்சள்  நன்கு கலக்குமாறு லேசாக அடித்து கொள்ளவும் .

(2 )பிரட் துண்டுகளை தோசைகல்லில் போட்டு லேசாக பொன்னிறம்  ஆகும் வரை சுட்டு ,அதை மிக்ஸ்யில் போட்டு துகள்களாக்கி  கொள்ளவும் .


(3 )  இஞ்சிபூண்டு விழுது, சோயா சாஸ் , டொமாடோ சில்லி சாஸ் , SCHEZWAN  சாஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதனுடன் சிக்கன் லாலிபாப்  துண்டுகளை சேர்த்து 15  நிமிடம் ஊற விடவும் .

(4 ) பின்னர் முட்டையுடன் மிளகாய் தூள் ,உப்பு ,சோளமாவு கலந்து அதனுடன் ஊற வைத்த  சிக்கன் லாலிபாப் துண்டுகளை சேர்த்து மீண்டும் 30 நிமிடம் ஊற வைக்கவும் .

(5 ) பின்னர் சிக்கன் துண்டுகளை பிரட் துகள்களில் பிரட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுத்து  பரிமாறவும் ..

*    லாலிபாப் துண்டுகளை சீவிய முட்டைகோஸ் ,SCHEZWAN  சாஸ் சேர்த்து  சாப்பிட நன்றாக இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக