வெள்ளி, 27 மே, 2011

BRINJAL GRAVY 2

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் - 4 
சின்ன வெங்காயம் - 20
கறிவேப்பிலை - சிறிது 
கடலை பருப்பு - 1  டீஸ்பூன்
சீரகம் - 1  ஸ்பூன் 
வெந்தயம் - சிறிது 
வரமிளகாய் - 2 
கடுகு - 1  டீஸ்பூன் 
சோம்பு - 1  டீஸ்பூன் 
கசகசா - 1  டீஸ்பூன் 
தேங்காய்  துறுவல் - சிறிது 
மிளகாய் தூள் - சிறிது 
கறிமசால் தூள் - சிறிது
புளி - எலுமிச்சை அளவு 
வெல்லம் - சிறிது 
எண்ணெய் , உப்பு - தேவையான அளவு 

செய்முறை :

( 1 )  கத்தரிக்காயை   நடுவில் நான்காக கீறி வைத்து கொள்ளவும் 
         ,புளி கரைத்து வைத்து கொள்ளவும் 

( 2 )  கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் , கசகசா , சீரகம் ,                 வரமிளகாய் சேர்த்து  வதக்கி அதனுடன் தேங்காய் துறுவல் ,தனியாதூள்  சேர்த்து சிறிது நீர் தெளித்து நன்கு அரைத்து கொள்ளவும்

(3 ) அரைத்து வைத்துள்ள மசாலாவை கத்தரிக்காய் கீறி வைத்துள்ள பகுதியில் வைக்கவும், மீதமுள்ள மசாலாவை புளி கரைசலுடன் கலந்து வைத்து கொள்ளவும் .

(4 ) கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை  பருப்பு, வெந்தயம் ,சோம்பு , நறுக்கிய சின்ன வெங்காயம்,கறிவேப்பிலை,கத்தரிக்காய்  சேர்த்து வதக்கி அதனுடன் சிறிது மிளகாய் தூள், கறிமசால் தூள்,உப்பு  சேர்த்து வதக்கி மசாலா சேர்த்த புளி கரைசலை  சேர்த்து கொதிக்க விடவும் .

(5 ) கத்தரிக்காய் நன்கு வேகும் வரை சிறிது நீர் சேர்த்து குழம்பை கொதிக்க விடவும் .அதனுடன் சிறிது வெல்லம் சேர்த்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கவும்

*  சாதம் , இட்லி, தோசை ஆகியவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக