ரவா பொங்கல்
ரவை - 1 கப்
பாசிபருப்பு - 1 / 2 கப்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
முந்திரி - 6
கறிவேப்பிலை - சிறிது
பால் - 1 /4 கப்
பச்சை மிளகாய் - 2
உப்பு , நெய் - தேவையான அளவு
செய்முறை :
(1 ) கடாயில் ரவையை கொட்டி லேசாக வறுத்து வைத்து கொள்ளவும்
(2 ) பாசி பருப்பை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ளவும்
(3 ) கடாயில் நெய் ஊற்றி சீரகம் , மிளகு ,முந்திரி லேசாக வறுத்து வைத்து கொள்ளவும்
(4 ) கடாயில் நெய் ஊற்றி கடுகு, பச்சை மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து அதனுடன் வேகவைத்த பாசிபருப்பு ,பால் , தேவையான அளவு நீர் ,உப்பு சேர்த்து கொதிக்க விடவும் .
(5 ) பின்னர் அதனுடன் ரவையை சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும் , அதனுடன் வறுத்து வைத்துள்ள சீரகம் , மிளகு, முந்திரி சேர்த்து நன்கு ரவை வேகும் வரை அடிபிடிக்காமல் கிளறி நெய் சேர்த்து இறக்கவும்
* தேங்காய் சட்னி அல்லது சாம்பார் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக