திங்கள், 20 ஜூன், 2011

GOBI CHILLI

காலி ப்ளவர்  சில்லி 

தேவையான பொருட்கள் :

காலி ப்ளவர் - 1 
கடலை மாவு - 4 ஸ்பூன் 
சோள மாவு - 3  ஸ்பூன் 
அரிசி மாவு - 1  ஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன் 
சோயா சாஸ் - சிறிது 
வினிகர் - சிறிது 
மஞ்சள் தூள் - 1 /2  டீஸ்பூன் 
வினிகர் - 1  ஸ்பூன் 
மிளகாய் தூள்  - 1 ஸ்பூன் 
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை :
 (1 ) காலி ப்ளவரை சிறு துண்டுகளாக்கி சுடு தண்ணிரில் உப்பு, மஞ்சள் சேர்த்து சிறிது நேரம் வேக விட்டு பின்னர் தண்ணீரை நன்கு வடித்து கொள்ளவும் .

 (2 ) கடலை மாவு,சோள மாவு,அரிசி மாவு,இஞ்சி பூண்டு விழுது,சோயா சாஸ்,வினிகர்,மிளகாய் தூள்,உப்பு  அனைத்தையும் சேர்த்து சிறிது நீர் சேர்த்து கலந்து ,அதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள  காலிப்ளவரை சேர்த்து 40 நிமிடம் ஊற வைத்து எண்ணையில் பொரித்து எடுக்கவும் .


 *  நறுக்கிய வெங்காயத்துடன் எலுமிச்சை சாறை சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும் 



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக