பனீர் பட்டாணி மசாலா
தேவையான பொருட்கள் :
பனீர் - 100 கிராம்
பச்சை பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 3
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 1
பட்டை - சிறிது
முந்திரி - 5
முந்திரி - 5
பிரியாணி இலை - 1
இஞ்சி பூண்டு விழுது -சிறிது
இஞ்சி பூண்டு விழுது -சிறிது
மல்லி தூள் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
பால் - அரை டம்ளர்
கசுரி மேத்தி ( வெந்தய கீரை பொடி) - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
(1) வெங்காயம்(2 ), தக்காளி ஆகியவற்றை தனி தனியாக அரைத்து கொள்ளவும்
(2 ) கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பட்டை,பிரியாணி இலை,பொடியாக நறுக்கிய வெங்காயம் ,இஞ்சி பூண்டு விழுது ,பச்சைமிளகாய் ,அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
(3 )பின்னர் அதனுடன் தக்காளி விழுது,மல்லி தூள்,மிளகாய் தூள் சேர்த்து வதக்கி ,பச்சை பட்டாணியை சேர்த்து நன்கு வேகவிடவும்.
(4 ) பின்னர் அதனுடன் பால் ,முந்திரி விழுது, வெந்தய கீரை பொடி,உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும் .
(5 ) அதனுடன் எண்ணையில் பொறித்த பனீரை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும் .
* சப்பாத்தி , நாண் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்
பனீர் பட்டாணி மசாலா நல்லா இருக்குங்க.
பதிலளிநீக்குகூகுள் இமேஜஸ் மூலம் உங்க வலைத்தளத்துக்கு வந்திருக்கேன், எல்லா ரெசிப்பிகளும் நல்லா இருக்கு. பாராட்டுக்கள்!
thankyou. Please try my other recipes also and let me know your comments.
பதிலளிநீக்குLet me know if you are looking for any specific recipe.