செவ்வாய், 8 ஜனவரி, 2013

RAJMA GRAVY


ராஜ்மா குழம்பு

தேவையான பொருட்கள் :

ராஜ்மா - 1 கப் 
வெங்காயம் - 2
தக்காளி -2
 இஞ்சி ,பூண்டு  விழுது - 1 சிறிதளவு 
 பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது 
கடுகு - சிறிது 
சோம்பு - சிறிது 
மஞ்சள் தூள் - சிறிது 
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
கறிமசால் தூள் - 1/2 ஸ்பூன் 
மல்லி தூள் - 1 ஸ்பூன் 
எண்ணெய் ,உப்பு -தேவையான அளவு 
நெய் - 2 ஸ்பூன் 

 செய்முறை:

(1)  ராஜ்மாவை சிறிது உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும் 

(2)ஒரு வெங்காயம்,ஒரு பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

(3) தக்காளியை விழுதாக   அரைத்து கொள்ளவும்

(4) வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு ,சோம்பு , ஒரு நறுக்கிய   வெங்காயம் ,பச்சை மிளகாய் ,( வெங்காயம் + பச்சை மிளகாய் ) விழுது ,
இஞ்சி ,பூண்டு  விழுது,கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

(5) பின்னர் அதனுடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள், கறிமசால் தூள்,  மல்லி தூள்,நெய்  ,வேக வைத்த ராஜ்மா  சேர்த்து  வதக்கவும்

(6) பின்னர் அதனுடன் தக்காளி விழுது,உப்பு ,ராஜ்மா வேக வைத்த தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க  வைத்து குழம்பு ரெடியானவுடன் இறக்கவும் 
    
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக