பாலக் பனீர்
தேவையான பொருட்கள் :
பசலை கீரை -1 கட்டு
பனீர் -100 க
பெரிய வெங்காயம் -1
பச்சை மிளகாய் -3
கடுகு-1 டீஸ்பூன்
கடலை பருப்பு -1 டீஸ்பூன்
சீரகம் -3 டீஸ்பூன்
கொத்துமல்லி-2 டீஸ்பூன்
இஞ்சி -சிறிது
பூண்டு -5 பல்லு
கறிவேப்பிலை -சிறிது
உப்பு,எண்ணெய்-தேவையான அளவு
நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை
(1 ) பசலை கீரையை சுத்தம் செய்து நறுக்கி வைத்து கொள்ளவும்
(2 ) கடாயில் சிறிது நெய் ஊற்றி பனீரை வறுத்து எடுத்து கொள்ளவும்
(3) பசலை கீரையுடன் பச்சை மிளகாய்,சீரகம்,இஞ்சி,
பூண்டு,கொத்துமல்லி சேர்த்து நன்கு வேக வைத்து , அரைத்து கொள்ளவும்
(4 ) கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு,கடலை பருப்பு ,சீரகம் ,உடைத்த
கொத்துமல்லி, கறிவேப்பிலை ,வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்
(5) பின் அரைத்து வைத்துள்ள பசலை கீரையுடன் உப்பு சேர்த்து 5 நிமிடம்
கொதிக்க வைக்கவும்
(6 ) பின் நெய்யில் வறுத்து வைத்துள்ள பனீரை குழம்பில் சேர்த்து 2 நிமிடம்
கொதிக்க வைத்து இறக்கவும்
* சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்
good....
பதிலளிநீக்கு