உருளை கிழங்கு ,வெந்தய கீரை மசாலா
தேவையான பொருட்கள் :
உருளை கிழங்கு -3 அல்லது 4
வெந்தய கீரை -1 கட்டு
வெங்காயம் -1
தக்காளி-1
கடுகு-1 டீஸ்பூன்
கடலை பருப்பு -1 டீஸ்பூன்
சீரகம்-1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -3
மஞ்சள் தூள் -1 சிட்டிகை
மிளகாய் தூள் -2 டீஸ்பூன்
உப்பு,எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை :
(1 ) உருளை கிழங்கை தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி எண்ணையில்
போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்
(2 ) வெந்தய கீரையை ஆய்ந்து நன்கு அலசி நீரில்லாமல் வடிகட்டி வைத்து கொள்ளவும்
(3 ) கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,கடலை பருப்பு,சீரகம்,பச்சைமிளகாய்,
வெங்காயம் தாளிக்கவும்
(4 ) அதனுடன் ஆயிந்து வைத்துள்ள கீரை,நறுக்கிய தக்காளி ,மஞ்சள் தூள், மிளகாய் தூள்,எண்ணையில் பொறித்த உருளை கிழங்கு ,உப்பு சேர்த்து
தண்ணீர் விடாமல் வதக்கவும்
(5 ) கீரை நன்கு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்
* சப்பாத்தி,சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக