புதன், 23 மார்ச், 2011

BITTER GOURD GRAVY

பாகற்காய்  புளி குழம்பு

தேவையான பொருட்கள்:
 பாகற்காய் -1 
வெங்காயம் -2 
தக்காளி -1 
இஞ்சி -சிறிது 
பூண்டு -6  பல்லு 
கடுகு - 1 டீஸ்பூன் 
கடலை பருப்பு -1 டீஸ்பூன்
சோம்பு -1 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் -2
கறிவேப்பிலை -சிறிது 
மஞ்சள் தூள் -1 சிட்டிகை 
மிளகாய் தூள் -1 டீஸ்பூன் 
கறிமசால் தூள் -1 டீஸ்பூன்
மல்லி தூள் -1 டீஸ்பூன்
புளி -எலுமிச்சை அளவு 
வெல்லம் - சிறிது 
உப்பு,எண்ணெய் -தேவையான அளவு 

செய்முறை: 

(1)   பாகற்காயை சிறு சிறு துண்டுகளாக்கி ,காய் மூழ்கும் அளவு நீர் விட்டு,             அதனுடன்  சிறிது  மஞ்சள்  தூள்  சேர்த்து  வேக விடவும் 

(2 )  காய் அரை பதம் வெந்தவுடன் அதை எண்ணையில் பொரித்து எடுத்து     கொள்ளவும்

(3 )  வெங்காயம் ,இஞ்சி ,பூண்டு ஆகியவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி விழுதாக அரைத்து வைத்து கொள்ளவும்

(4 )  கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி  கடுகு,கடலை பருப்பு, சோம்பு,வெங்காயம்,பச்சை மிளகாய்  மற்றும் அரைத்த வெங்காய விழுது ,தக்காளி,கறிவேப்பிலை  சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்

 (5 )   பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறிமசால் தூள் ,மல்லி தூள் ,உப்பு  சேர்த்து வதக்கி, புளி கரைசலை ஊற்றவும்

(6 )  பின்னர் பொரித்து வைத்துள்ள பாகற்காயை அதில் சேர்த்து வேக விடவும்
   
(7 )  பத்து நிமிடம் கழித்து சிறிது வெல்லம் சேர்த்து , குழம்பு கெட்டியானவுடன்  மல்லிதழை சேர்த்து இறக்கி  விடவும்

* சாதம்,சப்பாத்தி,தோசை ஆகியவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக