பீட்ரூட் சட்னி
தேவையான பொருட்கள் :
பீட்ரூட் - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 1
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தனியா - 1 / 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
புளி - சிறிது
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
(1 ) பீட்ரூட்டை தோல் நீக்கி சீவி வைத்து கொள்ளவும் ,வெங்காயத்தை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்
(2 ) கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, வெங்காயம் , சீரகம், தனியா,பூண்டு , கறிவேப்பிலை , பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி அதனுடன் துருவிய பீட்ரூட்,உப்பு ,சிறிதளவு அளவு நீர் தெளித்து வேக விடவும்
(3 ) பீட்ரூட் ஓரளவு வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்து ,அதனுடன் ஊறவைத்த சிறிய புளி துண்டை சேர்த்து அரைத்து எடுத்தால் பீட்ரூட் சட்னி ரெடி
@ அரைக்கும் போது சிறிது தேங்காய் சேர்த்தும் அரைக்கலாம்
* இட்லி,தோசைக்கு நன்றாக இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக