தேவையான பொருட்கள் :
கொள்ளு - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பூண்டு - 6 பல்லு
சீரகம் - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
புளி- சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
(1 ) கொள்ளு, நறுக்கிய தக்காளி இரண்டையும் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்
(2 ) கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், சீரகம்,தனியா ,பச்சை மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
(3 ) வெங்காயம் வதங்கியவுடன் வேகவைத்த கொள்ளு,தக்காளியுடன் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும்
(4 ) பின்னர் இதனுடன் ஊற வைத்த புளி ,உப்பு சேர்த்து அரைத்து எடுத்து மல்லி தழை தூவி பரிமாறவும் .
@ சட்னி அரைக்கும் போது கொள்ளு வேக வைத்த நீரை பயன்படுத்தவும்
@ அரைக்கும் போது 5 நறுக்கிய சின்ன வெங்காயத்தை பச்சையாக சேர்த்து அரைத்தால் நன்றாக இருக்கும்
* சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக