உருளை கிழங்கு வறுவல் :
தேவையான பொருட்கள் :
உருளை கிழங்கு - 4
வெங்காயம் - 1
கடுகு - 1 /2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 / 2 டீஸ்பூன்
கறிமசால் தூள் - 1 / 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் , உப்பு - தேவையான அளவு
செய்முறை :
(1 ) உருளை கிழங்கை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து, தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்
(2 ) மிளகாய் தூள், தனியா தூள்,கறிமசால் தூள் ,உப்பு ஆகியவற்றை உருளை கிழங்குடன் கலந்து 15 நிமிடம் வைக்கவும்
(3 ) கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு ,நறுக்கிய வெங்காயம், கறி வேப்பிலை சேர்த்து தாளித்து மசாலா தூள் கலந்து வைத்துள்ள உருளை கிழங்கை சேர்த்து 5 நிமிடம் அடி பிடிக்க விடாமல் கிளறி இறக்கவும் .
(4 ) மல்லி தழை சேர்த்து வறுவலை பரிமாறவும்
* சாம்பார் , தயிர் , ரசம் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக