தேவையான பொருட்கள் :
காலிப்ளவர் - 1
வெங்காயம் - 3
தக்காளி - 2
கடுகு - 1 / 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பூண்டு - 6 பல்லு
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 3 டீஸ்பூன்
கறிமசால் தூள் - 1 டீஸ்பூன்
கரம்மசால் தூள் - 1 / 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - காரத்திற்கு தேவையான அளவு
தேங்காய் துறுவல் - 1 கப்
புளி- எலுமிச்சை அளவு
எண்ணெய் , உப்பு - தேவையான அளவுசெய்முறை :
(1 ) காலிப்ளவரை மஞ்சள் தூள் ,சிறிது உப்பு சேர்த்து கொதிக்கும் நீரில் 10 நிமிடம் வேக வைத்து ,நீரை வடிகட்டி விடவும்
(2 ) கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி வதக்கி அதனுடன் பூண்டு , தனியா தூள் சேர்த்து லேசாக பச்சை வாசனை போனதும் தேங்காய் சிறிது சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்
(3 ) கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு,சோம்பு ,நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய், கறிவேப்பிலை ,கறிமசால் தூள், கரம் மசால் தூள் ,மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, சுத்தம் செய்து வைத்துள்ள காலிப்ளவரை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
(4 ) பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, தேவையான அளவு உப்பு ,.புளி கரைசல் , தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கழித்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கவும்
* சாதம், தோசைக்கு நன்றாக இருக்கும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக