வெள்ளி, 1 ஏப்ரல், 2011

BOTTLE GOURD GRAVY

சுரைக்காய்  குழம்பு 

தேவையான பொருட்கள் :

சுரைக்காய் - 1 
வெங்காயம் - 2 
தக்காளி - 4 அல்லது  5 
இஞ்சி, பூண்டு விழுது - சிறிது 
கடுகு -  1 /2  டீஸ்பூன்
கடலை பருப்பு - 1  டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
மஞ்சள் தூள் - 1  சிட்டிகை 
சாம்பார் தூள் - 3  டீஸ்பூன்
எண்ணெய்,உப்பு - தேவையான அளவு 

செய்முறை :

(1 ) சுரைக்காயை தோல் சீவி சிறு, சிறு துண்டுகளாக்கி கொள்ளவும் 

(2 )  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு, வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது ,கறிவேப்பிலை ,காய்ந்த மிளகாய் ,தக்காளி  சேர்த்து வதக்கவும்

(3 )  தக்காளி நன்கு வதங்கியவுடன் மஞ்சள் தூள் , சாம்பார் தூள் சேர்த்து வதக்கி நறுக்கி   வைத்துள்ள சுரைக்காயை சேர்க்கவும்.

(4 ) தேவையான அளவு உப்பு , தண்ணீர் சேர்த்து சுரைக்காயை வேக விடவும் 

(5 ) சுரைக்காய் நன்கு வெந்தவுடன் இறக்கி, மத்து வைத்து காயை நன்கு கடைந்து, மல்லி தழை தூவி  பரிமாறவும் .

*   சாதம், தோசைக்கு நன்றாக  இருக்கும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக