தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் - 10
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 1
பூண்டு - 5 பல்லு
இஞ்சி ,பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கடுகு - 1 /2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 கப்
செய்முறை :
(1 ) தேங்காயுடன் சோம்பு, பாதி சின்ன வெங்காயத்தை பச்சையாக அரைத்து வைத்து கொள்ளவும்
(2 ) கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு , நறுக்கிய சின்ன வெங்காயம்,பூண்டு , இஞ்சி பூண்டு விழுது ,மிளகாய் , மஞ்சள் தூள் ,தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் வெண்டைக்காய் சேர்க்கவும்.
(3 ) வெண்டைக்காய் லேசாக வதங்கியவுடன் சாம்பார் தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி புளி கரைசல் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
(4 ) பின்னர் அதனுடன் , அரைத்து வைத்துள்ள விழுது ,தேவையான அளவு உப்பு சேர்த்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கவும்
(4 ) பின்னர் அதனுடன் , அரைத்து வைத்துள்ள விழுது ,தேவையான அளவு உப்பு சேர்த்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கவும்
* சாதம், தோசைக்கு நன்றாக இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக