செவ்வாய், 29 மார்ச், 2011

POHA

அவல் உப்புமா 

தேவையான பொருட்கள் :

அவல்  - 1  கப் 
எலுமிச்சை - 1 
வெங்காயம் - 1  
பச்சை மிளகாய் - 2
சர்க்கரை - 1 /2 டீஸ்பூன்
கடுகு - 1  டீஸ்பூன் 
கடலை பருப்பு - 1  டீஸ்பூன்
சீரகம் - 1  டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது 
மஞ்சள் தூள் - 1 /2  டீஸ்பூன் 
வறுத்த வேர்கடலை  - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை : 

(1 ) அவலை    நீர்  தெளித்து நன்கு பிசிறி வைத்து கொள்ளவும்

(2 ) கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு , சீரகம், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் , கறிவேப்பிலை , மஞ்சள் தூள்,சர்க்கரை ,சிறிது உப்பு  சேர்த்து தாளிக்கவும்

(3 ) பின்னர் அதனுடன் 1 / 2  மூடி எலுமிச்சம் பழ சாறை சேர்த்து அவலை கொட்டி கிளறவும்

(4 ) அவல் சேர்த்தவுடன் தேவையான அளவு உப்பு ,மீதி  எலுமிச்சை சாறை சேர்த்து அவலை நன்கு கிளறி, அதனுடன் வறுத்த வேர்கடலையை சேர்த்து இறக்கவும்

(5 )  சிறிது மிச்சர் ,கொத்துமல்லி தழை தூவி பரிமாறவும்
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக